ஜப்பான் அரசியலமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்; பிரதமர் ஷின்ஜோ அபே விருப்பம்

ஜப்பான் அரசியலமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் அரசியலமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்; பிரதமர் ஷின்ஜோ அபே விருப்பம்
Published on

டோக்கியோ,


ஜப்பானில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்பு இரண்டாம் உலகப்போருக்கு பின் இயற்றப்பட்டதாகும். இந்த அரசியலமைப்பின் 9வது பிரிவின்படி அந்த நாட்டின் ராணுவத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசியலமைப்பு சட்டத்தில் சீர்திருத்தம் செய்து ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே பல ஆண்டுகளாக வலியுறுத்துகிறார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஷின்ஜோ அபேயின் பதவி காலம் முடிய இருக்கும் நிலையில் அதற்குள் அரசியலமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டுமென அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமராக எனக்கு ஒரு வருடம் மூன்று மாதங்கள் உள்ளன. இந்தக் காலக்கெடுவுக்கு முன்பாக அரசியலமைப்பில் சீர் திருத்தம் செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்த நான் விரும்புகிறேன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com