

லாகோஸ்,
நைஜீரியா நாட்டில் வடக்கே கடுனா மாகாணத்தில் கடந்த 5ந்தேதி பேப்டிஸ்ட் அகாடமி பள்ளி மாணவர்கள் 121 பேரை கடத்தல்காரர்கள் கடத்தி சென்றனர்.
இதன்பின்னர் அந்நாட்டு பண மதிப்பின்படி, ஒரு மாணவருக்கு தலா 5 லட்சம் நைராக்கள் பிணை தொகையாக கொடுக்க வேண்டும் என கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்தனர்.
இந்நிலையில், உடல்நலனை கவனத்தில் கொண்டு அவர்களில் ஒருவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். 5 பேர் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி வந்து விட்டனர்.
இந்த சூழலில், கடத்தப்பட்ட மாணவர்களில் 28 பேர் 3 வாரங்களுக்கு பின் நேற்று (ஞாயிற்று கிழமை) விடுவிக்கப்பட்டு உள்ளனர். எனினும், 80 மாணவர்கள் வரை இன்னும் விடுவிக்கப்படாமல் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்பதற்கான ஆலோசனையை அரசு நடத்தி வருகிறது.