

இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க கோர்ட்டு இந்த தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் சார்பில் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எனினும் அதன் பின்னர் ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் முந்தைய நிர்வாகத்தின் மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்தது. இந்த நிலையில் டிக்-டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சீன அரசு வாங்கியிருப்பதால் உடனடியாக டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டுமென குடியரசு கட்சியை சேர்ந்த செனட்சபை உறுப்பினர் மார்கோ ரூபியோ ஜனாதிபதி ஜோ பைடனை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் டிக்-டாக் சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு இல்லை என்று பைடன் நிர்வாகம் இனி பாசாங்கு செய்ய முடியாது. முன்பே, டிக்-டாக் தனிப்பட்ட தனியுரிமை மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது என்பது தெளிவாக இருந்தது. இப்போதும் அது அப்படியே உள்ளது. எனவே அந்த செயலியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.