சீனா: ஓட்டலில் பயங்கர தீ விபத்து - 22 பேர் பலி

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சீனா: ஓட்டலில் பயங்கர தீ விபத்து - 22 பேர் பலி
Published on

பீஜிங்,

சீனாவின் லியோயிங் மாகாணம் லியாயங் நகரில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் இன்று மதியம் 12.30 மணியளவில் 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டலில் தீ பற்றியது. இந்த சம்பவத்தில் ஓட்டலில் இருந்த 22 பேர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com