நவம்பர் 1 முதல் கட்டுப்பாடு தளர்வு: ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி

ஆஸ்திரேலியாவில் நவம்பர் 1 முதல் கட்டுப்பாடு தளர்வு காரணமாக ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1 முதல் கட்டுப்பாடு தளர்வு: ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி
Published on

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மனித உயிர் பாதுகாப்பு நிர்ணய சட்டம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம், ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்வதை கட்டுப்படுத்தியது.

தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இந்த சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 2 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நவம்பர் 1-ந் தேதி தாராளமாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம்.

இது பற்றி அந்த நாட்டின் சுகாதார மந்திரி கிரேக் ஹண்ட் கூறும்போது, ஆஸ்திரேலிய குடிமக்களும், நிரந்தர குடியுரிமை பெற்றவர்களும், வெளிநாடு செல்ல விரும்பினால் 2 தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை சிகிச்சை பொருட்கள் நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும். பயணத்துக்கு குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னதாக இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தற்போது கொரோனாவின் மூன்றாவது அலையில் உள்ள ஆஸ்திரேலியாவில் நேற்று காலை நிலவரப்படி ஒரு நாளில் 1,800 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 16 பேர் தொற்று பாதிப்பால் இறந்தும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com