ஜெர்மனியில் 60 வயதுக்குட்பட்டவர்கள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட கட்டுப்பாடுகள்

ஜெர்மனியில் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில், 60 வயதுக்குட்பட்டவர்கள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் 60 வயதுக்குட்பட்டவர்கள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட கட்டுப்பாடுகள்
Published on

பெர்லின்,

இங்கிலாந்தைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்துள்ள அஸ்ட்ரா ஜெனகா கொரோனா தடுப்பூசி, பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பலருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டதாக புகார்கள் எழுந்ததையடுத்து, அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் தடை செய்தன.

இதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார கண்காணிப்புக் குழு ஆகியவை நடத்திய ஆய்வுகளின் முடிவில், அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசிக்கு சில நாடுகளில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் நாடு முழுவதும் ஆஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 60 வயதிற்கும் கீழ் உள்ள பலருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 60 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கான தடுப்பூசி பயன்பாட்டை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆனால், தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவருடன் கலந்தாலோசித்து, சிக்கல் இல்லை என்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com