பழிக்கு பழி

சிகாகோவை சேர்ந்த ஒருவர், தன்னுடைய முன்னாள் காதலியை புதுமையான முறையில் பழி வாங்கியுள்ளார்.
பழிக்கு பழி
Published on

முன்னாள் காதலியின் பெயரில் ஒரு பழைய காரை வாங்கியவர், அதை விமான நிலையத்தின் வி.ஐ.பி. கார் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு கிளம்பிவிட்டார். ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் 680 நாட்கள் விமான நிலையத்திலேயே கார் நின்றிருக்கிறது.

அனுமதி சீட்டு வாங்காமல், முறையில்லாமல் நிறுத்தப்பட்ட காரை கவனித்த விமான நிலைய அதிகாரிகள், பெரிய பில்லோடு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இலவசமாக கார் கிடைக்கிறதே என்ற ஆசையில் ஆமாம் சாமி என்று தலையாட்டியவர், அபராத தொகையை கேட்டு அதிர்ந்துவிட்டாராம்.

ஏனெனில் அந்த கட்டணம், இந்த கட்டணம், செலுத்த தவறிய கட்டணம்... என அபராத தொகையை 1 லட்சம் டாலராக ரவுண்டு செய்திருக்கிறார்கள். இந்த தொகையை கேட்டு அம்மணி மயங்கி விட்டாராம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com