சீனாவில் கொரோனாவால் முன்னணி டாக்டர் இறந்ததால் பின்னடைவு

சீனாவில் கொரோனாவால் முன்னணி டாக்டர் ஒருவர் இறந்ததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனாவால் முன்னணி டாக்டர் இறந்ததால் பின்னடைவு
Published on

பீஜிங்,

சீனாவில் முன்னணி சிறுநீரக மருத்துவ நிபுணராக விளங்கியவர் டாக்டர் ஹூ வெய்பெங். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் உறுதி செய்யப்பட்டது. இவருடன் பணியாற்றிய இதய மருத்துவ நிபுணரான டாக்டர் யி பான் என்பவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சையின் போது இருவரது நிறமும் கருப்பானது. இது தொடர்பான புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர் ஹூ வெய்பெங் உடல்நிலை மார்ச் மத்தியில் சற்று தேறியது. ஆனால் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில், அவரது பெருமூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. டாக்டர் யி பான் உடல்நிலை தேறி கடந்த மாதம் 6-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் டாக்டர் ஹூ வெய்பெங் 4 மாத கால போராட்டத்துக்கு பின்னர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அது கொரோனா வைரசுக்கு எதிரான சீனாவின் போராட்டத்தில் பின்னடைவாக அமைந்துள்ளது. கொரோனா வைரசின் தீவிரத்தன்மை பற்றி முதன்முதலாக சீனாவில் போட்டுடைத்த டாக்டர் லி வென்லியாங் பணியாற்றிய ஆஸ்பத்திரியில்தான் டாக்டர் ஹூ வெய்பெங் பணியாற்றி வந்தார் என சீன ஊடகங்கள் கூறுகின்றன. டாக்டர் ஹூ வெய்பெங் மரணத்துக்கான சரியான காரணம் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த செய்தி சீன சமூக ஊடக தளங்களில் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com