அமெரிக்க போர் விமானத்தில் இருந்து குதித்த விமானியை பிடித்தால் பரிசு - ஈரான் அறிவிப்பு

அமெரிக்காவின் யுஎஸ் எப் 15 - இ என்ற விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.
அமெரிக்க போர் விமானத்தில்  இருந்து குதித்த விமானியை பிடித்தால் பரிசு - ஈரான் அறிவிப்பு
Published on

ஈரான் மீது அமெரிக்க படை, வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தாக்குதல் நடத்த வந்த ஒரு அமெரிக்க போர் விமானத்தில் இருந்து விமானி ஒருவர் ஈரானில் குதித்து விட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சியுடன் இணைந்த ஒரு உள்ளூர் டி.வி. சேனல் அறிவித்துள்ளது.அதுமட்டுமின்றி, அந்த விமானியை உயிருடன் பிடித்து போலீசில் ஒப்படைப்பவருக்கு விலைஉயர்ந்த பரிசு வழங்கப்படும் என்று அந்த சேனலில் தொகுப்பாளர் அறிவித்தார்.

இந்த தகவல் பற்றி கேட்டதற்கு அமெரிக்க வெள்ளை மாளிகையோ, ராணுவ தலைமையகமான பென்டகனோ உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில், அமெரிக்க ராணுவம் மீட்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர், அமெரிக்கா வின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாகவே மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். ஒரு விமானியை அமெரிக்கா மீட்டுள்ளதாகவும் மற்றவரை தேடும் பணி நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com