போரில் வெற்றி பெற்ற பின் சுதந்திரமான உக்ரைனை மீண்டும் கட்டமைத்திடுவோம்; உக்ரைனின் பணக்கார மனிதர் சபதம்!

மரியுபோல் நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதாக உக்ரேனிய தொழிலதிபர் ரினாட் அக்மெடோவ் உறுதியளித்துள்ளார்.
போரில் வெற்றி பெற்ற பின் சுதந்திரமான உக்ரைனை மீண்டும் கட்டமைத்திடுவோம்; உக்ரைனின் பணக்கார மனிதர் சபதம்!
Published on

கீவ்,

ரஷிய போருக்கு பின் நாட்டை மீண்டும் கட்டமைத்திட விருப்பம் கொண்டிருப்பதாக உக்ரைனின் பெரும் பணக்கார மனிதர் தெரிவித்துள்ளார். ரஷியாவின் ராணுவ தாக்குதலுக்கு மத்தியில், நாட்டில் ஏற்பட்ட சேதத்தை மீட்டெடுக்கப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதாக உக்ரேனிய தொழிலதிபர் ரினாட் அக்மெடோவ் உறுதியளித்துள்ளார்.அங்கு அவருக்கு சொந்தமான, அசோவ்ஸ்டல் மற்றும் இலிச் இரும்பு மற்றும் எஃகு ஆலைகள் இரண்டு உள்ளன.

கோடீஸ்வரர் ரினாட் அக்மெடோவ், உக்ரைனின் மாபெரும் பணக்காரர் ஆவார். மெட்டின்வெஸ்ட் குழுமத்தின் தலைவராக உள்ளார். அந்நிறுவனத்துக்கு உக்ரைனின் மரியுபோல் நகரில் இரண்டு பெரிய எஃகு ஆலைகள் உள்ளன. அவரது சொத்துக்களுக்காக 'டான்பாஸின் உரிமையாளர்' என்று அழைக்கப்பட்டவர் ஆவார்.

அவருடைய மெட்டின்வெஸ்ட் குழுமம், உக்ரைனின் மிகப்பெரிய ஸ்டீல் நிறுவனங்களில் ஒன்றாகும். ரஷிய கட்டுப்பாட்டு பகுதிகளில் தங்கள் பணிகளை தொடரப் போவதில்லை என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, உக்ரைனின் மிகப்பெரிய செல்வந்தர் இவர் ஆவார். அவருடைய தற்போதைய சொத்துமதிப்பு 760 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும்.

அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் முழு உக்ரைனையும் மீண்டும் கட்டியெழுப்புவோம். நாம் அனைவரும் சுதந்திரமான, ஜனநாயக மற்றும் வெற்றிகரமான ஐரோப்பியத்துடன் இணைந்த உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று நான் நம்புகிறேன்.

மரியுபோல் நகரத்திலிருந்து புனரமைப்பு பணிகளை தொடங்குவேன். ரஷிய போருக்கு பின், உக்ரைன் அதன் உலோகவியல் திறன்களில் 40% வரை இழந்துவிட்டது.

ரஷிய படைகளால் மரியுபோல் கட்டுப்பாட்டில் உள்ளதால் உக்ரைனின் 3ல் ஒரு பங்கு உலோக உற்பத்தி பொருட்கள் கிடைக்கும் மரியுபோலில் இருந்து வரும் பொருட்கள் தடை செய்யப்பட்டுவிட்டன.

உக்ரைனின் கட்டுப்பட்டுக்குள் இருக்கும் மரியுபோல் நகருக்கு மீண்டும் வந்து, அங்கு முன்பு போல ஸ்டீல் ஆலை பணியை தொடங்க வேண்டும் என்பதே என் லட்சியம்.

போர் தொடங்கிய பின் பல தொழிலதிபர்கள் உக்ரைனை விட்டு வெளியேறினர். ஆனால் நான் அவ்வாறு வெளியேறவில்லை. உக்ரைனில் தான் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com