ஹவாயில் அபாய சங்கு ஒலித்து சோதனை

வடகொரியா 6–வது முறையாக கடந்த செப்டம்பர் மாதம் 3–ந் தேதி அணுகுண்டு வெடித்து சோதித்தது.
ஹவாயில் அபாய சங்கு ஒலித்து சோதனை
Published on

வாஷிங்டன்,

வடகொரியா 6வது முறையாக கடந்த செப்டம்பர் மாதம் 3ந் தேதி அணுகுண்டு வெடித்து சோதித்தது. தொடர்ந்து அந்த நாடு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பில், குறிப்பாக எந்த ஒரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்த கவாசாங்15 ஏவுகணையை கடந்த 29ந் தேதி ஏவி சோதித்தது. இது உலகளாவிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஹவாய் தீவில் நேற்று முன்தினம் காலை அணு ஆயுத தாக்குதல் அபாய சங்கு ஒலித்து சோதனை செய்யப்பட்டது.

ஹவாய் தீவில், மாதம் தோறும் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு அபாய சங்கு ஒலித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வடகொரியாவின் எச்சரிக்கையையொட்டி, இப்போது ஹவாயில் முதல்முறையாக அணு ஆயுத தாக்குதல் அபாய சங்கு ஒலித்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com