உலகளவில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு அபாயம்

ஜலசந்தியை அமெரிக்கா - இஸ்ரேலை சேர்ந்த கப்பல்கள் கடக்க முயன்றால் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளவில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு அபாயம்
Published on

மத்திய கிழக்கில் போர் நடந்து வரும்வேளையில் முக்கிய கடல் போக்குவரத்தான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

ஜலசந்தியை அமெரிக்கா - இஸ்ரேலை சேர்ந்த கப்பல்கள் கடக்க முயன்றால் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் வளைகுடா கடல் பகுதியில் ஏராளமான கப்பல்கள் புறப்பட முடியாமல் தவித்து வருகின்றன.

இதனால் பல நாடுகளுக்கு கச்சா எண்ணை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணை விநியோகத்தை நம்பியுள்ள பாகிஸ்தானில் நள்ளிரவில் பெட்ரோல் -டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.266.17-ல் இருந்து ரூ.321.17 ஆக உயர்த்தப்பட்டது. இது சுமார் 17 சதவீதம் அதிகரிப்பு ஆகும். டீசல் லிட்டருக்கு ரூ.280.8-ல் இருந்து ரூ.335.86 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டில் போதுமான பெட்ரோலிய இருப்பு உள்ளது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com