இயற்கையை பாதுகாக்க வேறு வழி தெரியல ஆத்தா.. நதியை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்

ஏவன் நதியின் அவல நிலையை உலகிற்கு உணர்த்துவதற்காக கடந்த 2023ல் அந்த நதியைத் திருமணம் செய்துகொண்டார்.
இளம்பெண்
Published on

லண்டன்,

காதல் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவம் ஆகும். ஒரு சிலருக்கு மட்டும் மற்றவர் மீது காதல் ஏற்படுவதற்கு அவர்களின் சிந்தனை, உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகள் மிக முக்கிய காரணமாக அமைகின்றன.

காதல் திருமணம்

காதல் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். உறவில் ஏற்படும் ஒரு தலைக்காதல், உறவில் உருவாகும் காதல் திருமணம், காதல் கலப்புத் திருமணம், இரகசிய காதல் திருமணம், காவல் நிலையம் செல்லும் நிலை வரை சென்று திருமணம், காவல் நிலையம் சென்றும் திருமணம் முடிக்காமல் காவலில் இருக்கும் நிலை, காதலித்தவரையே நினைந்து வாழும் வாழ்க்கை இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

நதியை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்

இந்தநிலையில் இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இயற்கையைப் பாதுகாக்க வேறு வழி தெரியல ஆத்தா என்ற பேச்சுவழக்கில், நதியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கையைப் பாதுகாக்க பல இயக்கங்கள் உள்ளன. ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த ஒரு இளம்பெண் ஒரு நதியைத் திருமணம் செய்து கொண்டு, இப்போது அதன் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்.

ஏவன் நதி

இங்கிலாந்தின் நீர்வழிகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவது குறித்து கவலை கொண்ட, மெக் என்ற 28 வயதுப் பெண், ஏவன் நதியின் அவல நிலையை உலகிற்கு உணர்த்துவதற்காக கடந்த 2023ல் அந்த நதியைத் திருமணம் செய்துகொண்டார்.

அன்று முதல்,அவர் தனது பெயரை‘மெக்ஏவன்’என்று மாற்றிக்கொண்டு, தன்னை மெக் ஏவன்

அந்த நதியின் மனைவியாக முன்னிறுத்தி வருகிறார். இப்போது அவர் ஏவன் நதிக்கு சட்டப்பூர்வ உரிமை களை வழங்குவதை நோக்க மாகக்கொண்ட ஒருபுதுமையான இயக்கத்தை தொடங்கியுள்ளார். இதற்காக மெக் ஏவன் மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com