

ஹவானா,
கியூபா நாட்டில் ஹவானா நகருக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், ஆசிரியர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தலைநகர் ஹவானாவில் உள்ள பள்ளி கூடங்களில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
அங்கிருந்து புறப்பட்டு கிரான்மா கிழக்கு மாகாணத்திற்கு பேருந்தில் திரும்பி கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் சென்ற பின்னர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதியாக பள்ளி கூடங்களை பயன்படுத்த முடிவானது.
இந்நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த 10 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேரது நிலைமை மோசமடைந்து உள்ளது.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஹவானா மற்றும் அருகேயுள்ள மாயாபிக் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.