ஐவரி கோஸ்ட்டில் நடந்த சாலை விபத்தில் 26 பேர் பலி

ஐவரி கோஸ்ட்டில் நடந்த சாலை விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.
ஐவரி கோஸ்ட்டில் நடந்த சாலை விபத்தில் 26 பேர் பலி
Published on

அபித்ஜன்,

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஐவரி கோஸ்ட்டின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள பிரோகோவா என்ற கிராமத்தில் இரண்டு மினி பஸ்கள் நேருக்கு நேர் மோதியது. இந்த மோதலில் இரண்டு மினி பஸ்களில் தீ பிடித்தது.

இந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர் மற்றும் 28 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மினி பஸ்கள் மோதியதில் உயிரிழந்த 26 பேரில் 10 பேர் தீ விபத்தில் உயிரிழந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் பாழடைந்த சாலைகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படுவது பொதுவானது என்றும் ஆண்டுதோறும் 1,000 பேர் உயிரிழப்பதாகவும் அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வடக்கு ஐவரி கோஸ்ட்டில் பஸ் மீது டேங்கர் லாரி மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 44 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com