

ரியாத்,
சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.
சவுதி அரேபியாவில் உள்ள அபு ஹத்ரியா நெடுஞ்சாலையில் இரு டிரக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த சகாய ராஜ் (56), வாலன் பெரப் ராஜ் (27) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
எதிரே வந்த டிரக்கை பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒட்டுநர் ஓட்டி வந்துள்ளார். அவர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த சவுதி காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைபற்றி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது உடல்களை தாயகம் கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.