சிங்கப்பூரில் சமூக இடைவெளியை கண்காணிக்க ரோபோ நாய்

சிங்கப்பூரில் உள்ள பூங்கா ஒன்றில் சமூக இடைவெளியை கண்காணிக்க ரோபோ நாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சமூக இடைவெளியை கண்காணிக்க ரோபோ நாய்
Published on

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் நகரின் பிஷான் அங் மோ கியோ பூங்காவில் ஸ்பாட் என்கிற ரோபோ நாய், அங்கு வருவோரை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.

அமெரிக்காவின் பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த எந்திர நாய், பூங்காவிற்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் விலகி இருங்கள், சமூக இடைவெளி கடைப்பிடியுங்கள் என்னும் விழிப்புணர்வு வேண்டுகோளை தொடர்ந்து ஒலிக்கிறது.

பராமரிப்பாளர் ஒருவர் உதவியுடன் பூங்காவை சுற்றி வரும், இந்த எந்திர நாயின் உடலில் சக்திவாய்ந்த கேமரா மற்றும் புள்ளி விவரங்களை ஆய்வு செய்யும் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பூங்காவிற்குள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக அறிந்து விட இயலும்.

இந்த ரோபோ நாயை பரிசோதனை அடிப்படையில் 2 வாரங்கள் பயன்படுத்தி பார்க்க சிங்கப்பூர் நகர பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எந்திர நாயின் மூலம் தனிப்பட்ட நபர்களின் தகவல் எதுவும் சேகரிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com