நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ராக்கெட் சோதனை வெற்றி

கடந்த வாரம் இந்த ராக்கெட்டை ஏவ முயற்சி செய்தபோது, ஏவுதளத்திலேயே என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ராக்கெட் சோதனை வெற்றி
Published on

வாஷிங்டன்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நோக்கில் 407 அடி உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் மெகா ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 13-வது சோதனை ஓட்டம், டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது.

இந்தச் சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்ணில் ஏவப்பட்டு ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, ராக்கெட் இந்தியப் பெருங்கடலில் மென்மையாகத் தரையிறங்கியது. இது ஸ்டார்ஷிப் வி3 ரக ராக்கெட்டின் 2-வது சோதனைப் பயணமாகும். கடந்த வாரம் இந்த ராக்கெட்டை ஏவ முயற்சி செய்தபோது, ஏவுதளத்திலேயே என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com