இங்கிலாந்தில் மன்னர் பரம்பரை ரெயில் சேவை நிறுத்தம்


இங்கிலாந்தில் மன்னர் பரம்பரை ரெயில் சேவை நிறுத்தம்
x
தினத்தந்தி 3 July 2025 3:45 AM IST (Updated: 3 July 2025 3:45 AM IST)
t-max-icont-min-icon

பக்கிங்ஹாம் அரண்மனை முடிவின்பேரில் இந்த ரெயில் தனது சேவையை சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு நிறுத்தியுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் சேவை இயங்கி வருகிறது. இந்தநிலையில் கடந்த 1869 முதல் அந்த நாட்டை ஆட்சி செய்யும் மன்னர் பரம்பரையினர் மட்டும் பயன்படுத்தும் வகையில் சிறப்பு 'ராஜ' ரெயில் சேவை இயக்கப்பட்டது. அப்போதைய ராணி விக்டோரியா வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணத்திற்காக ஆடம்பர வசதிகளை கொண்ட சிறப்பு பெட்டிகளுடன் இந்த ரெயில் இயங்கியது.

இந்த ரெயில் சேவையைத் தற்போது தொடருவதற்கு அதிக செலவு பிடிப்பதாலும், பழைய தொழில்நுட்பங்களை கைவிட்டு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த விரும்புவதாலும் மன்னர் சார்லஸ் இந்த ரெயில் சேவையை நிறுத்துவதற்கு ஒப்புதல் கொடுத்தார். பக்கிங்ஹாம் அரண்மனை முடிவின்பேரில் இந்த ரெயில் தனது சேவையை சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு நிறுத்தியுள்ளது. முன்னதாக இந்த ரெயிலை மன்னர் சார்லஸ் நேரில் சென்று பார்வையிட்ட காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

1 More update

Next Story