இளவரசர் ஹாரி - மேகன் மெர்கல் திருமணம் விருந்தினர்கள் வரத்தொடங்கினர்

இளவரசர் ஹாரி - மேகன் மெர்கல் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருந்தினர்கள் வரத்தொடங்கினர். #Royalwedding2018
இளவரசர் ஹாரி - மேகன் மெர்கல் திருமணம் விருந்தினர்கள் வரத்தொடங்கினர்
Published on

லண்டன்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மெர்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

ஹாரியின் தந்தையும் இளவரசருமான சார்லஸ், மணமகள் மெர்கலுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக மெர்கலின் தந்தை, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார். எனவே, மெர்கலின் வேண்டுகோளை ஏற்று சார்லஸ், அவருக்கும் தந்தை இடத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார்.

36 வயதாகும் மெர்கல் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை ஆவார். ஹாரிக்கு 33 வயதாகிறது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் ஹாரியின் தாத்தாவான இளவரசர் பிலிப் (96) பங்கேற்பார் என்று பக்ஹிங்காம் அரண்மனை உறுதி செய்துள்ளது. இடுப்பில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பிலிப், இப்போது அதில் இருந்து மீண்டு வருகிறார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத், ஹாரியின் அண்ணன் வில்லியம் அவரது மனைவி கேத் மிடில்டன். இத்தம்பதியின் இரு குழந்தைகள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் அனைவரும் திருமணத்தில் பங்கேற்பதற்காக விண்ட்சோர் நகருக்கு வந்துள்ளனர். அங்கு அரச குடும்பத்துக்குச் சொந்தமான மாளிகையில் அவர்கள் தங்கியுள்ளனர். ஹாரியின் திருமண நிகழ்ச்சியை பல்வேறு சர்வதேச தொலைகாட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறது.

இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருந்தினர்கள் மற்றும் மொகல் ரசிகாகள் பலா வரத்தொடங்கினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com