கொலை செய்துவிட்டு இந்தியா தப்பிய கொலையாளி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5¼ கோடி பரிசு - ஆஸ்திரேலிய போலீஸ் அதிரடி

கொலை செய்துவிட்டு இந்தியா தப்பிய கொலையாளி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5¼ கோடி பரிசு வழங்கப்படும் என ஆஸ்திரேலிய போலீஸ் அறிவித்துள்ளது.
கொலை செய்துவிட்டு இந்தியா தப்பிய கொலையாளி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5¼ கோடி பரிசு - ஆஸ்திரேலிய போலீஸ் அதிரடி
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வாங்கட்டி கடற்கரையில் தனது நாயுடன் நடைபயிற்சி சென்ற டோயா கார்டிங்லி ( வயது 24) என்ற பெண் கொலை செய்யப்பட்டார்.

2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த இந்தக் கொலையை, ஆஸ்திரேலியாவில் இன்னிஸ்பெயில் என்ற இடத்தில் ஆண் நர்சாக வேலை செய்த ராஜ்விந்தர் கிங் (38) என்பவர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இவர், கொலை நடந்த மறுநாளில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை ஆஸ்திரேலியாவில் விட்டு விட்டு இந்தியாவுக்கு தப்பிவிட்டார். இது உறுதியாகி உள்ளது. இவரை 4 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய போலீஸ் தேடுகிறது. ஆனால் இன்னும் சிக்கவில்லை.

இந்த நிலையில், இவரை கைது செய்வதற்கு துப்பு தந்து உதவுபவருக்கு 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ரொக்கப்பரிசை (சுமார் ரூ.5 கோடி) வழங்குவதாக குயின்ஸ்லாந்து போலீசார் அறிவித்துள்ளனர். இது அங்கு அறிவிக்கப்பட்டுள்ள மிக உயர்ந்த சன்மானம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் துப்பு பற்றி தகவல் அளிக்க குயின்ஸ் லேண்ட் போலீஸ் ஒரு வாட்ஸ்அப் இணைப்பை உருவாக்கியுள்ளது. ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறைக்கு +911141220972 என்ற எண்ணில் அழைக்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com