போரில் இதுவரை உக்ரைன் வீரர்கள் 14 ஆயிரம் பேர் பலி.?! - ரஷிய ராணுவ அதிகாரி

போரில் இதுவரை உக்ரைன் வீரர்கள் 14 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக ரஷிய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் ஒரு மாத காலத்தைத் தாண்டி நீண்டு கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் போரில் இருதரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ரஷிய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ரஷியா தலைநகர் மாஸ்கோவில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

துரதிர்ஷ்டவசமாக, சிறப்பு ராணுவ நடவடிக்கையின்போது, நமது தோழர்கள் மத்தியிலும் இழப்புகள் உள்ளன. இன்றுவரை, 1,351 ரஷிய வீரர்கள் இறந்துள்ளனர். 3,825 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரைன் தரப்பில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 16 ஆயிரம் வீரர்கள் படுகாயமடைந்தனர்.

உக்ரைன் தலைமையின் வேண்டுகோளின் பேரில், அந்த நாடு 62 நாடுகளைச் சேர்ந்த 6,595 வெளிநாட்டு கூலிப்படையினர் மற்றும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. போர் விதிகள் அவர்களுக்குப் பொருந்தாது, அவர்கள் இரக்கமின்றி அழிக்கப்படுவார்கள் என்று அந்த அதிகாரி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com