புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா.. நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு


புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா.. நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு
x
தினத்தந்தி 18 Dec 2024 5:10 PM IST (Updated: 18 Dec 2024 5:54 PM IST)
t-max-icont-min-icon

ரஷியா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்கோ:

உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயை குணப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இந்த தடுப்பூசி பல ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் அளித்த பேட்டியில், 'புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக mRNA அடிப்படையிலான அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்' என்றார்.

பரிசோதனைகளின்போது, இந்த தடுப்பூசியானது சிறப்பாக செயல்பட்டு புற்றுநோய் வளர்ச்சி மற்றும் புற்றுநோய் பரவுவதை தடுத்ததாக கமலேயா தேசிய ஆராய்ச்சி மைய இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் தெரிவித்தார்.

1 More update

Next Story