மூன்றாம் உலக போருக்காக சிரியாவில் போர் விமானங்களை குவித்த ரஷ்யா

சிரியாவில் அமெரிக்காவும், இங்கிலாந்து தாக்குதல் நடத்துவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் ரஷ்யா தனது படைகளுடன் மூன்றாம் உலக போருக்கு தயாரானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்றாம் உலக போருக்காக சிரியாவில் போர் விமானங்களை குவித்த ரஷ்யா
Published on

சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அசாத் ரசாயன தாக்குதல் நடத்தியதாக கூறி அங்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு ரஷ்ய அதிபர் புதின் தனது கடும் கண்டனங்களை பதிவு செய்தார்.இந்நிலையில் இந்த தாக்குதல் நடப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னால் அதாவது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஷ்யா மூன்றாம் உலக போர் தாக்குதலுக்கு தயாரானதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த ஆதாரமான செயற்கைகோள் புகைப்படத்தை இராணுவ வரலாற்றாசிரியரும், பத்திரிக்கையாளருமான பபக் தக்வே வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சிரிய அரசுக்கு சொந்தமான விமானத் தளத்தில் ஆயுதங்கள் ஏந்திய அதிகளவிலான ரஷ்யாவின் ராணுவ விமானங்கள் நிற்கிறது. இதில் 28 போர் விமானங்களும் அடக்கமாகும். இந்தப் புகைப்படங்களானது லட்டகியா நகரில் உள்ள விமான தளத்தில் எடுக்கப்பட்டுள்ளது. Sukhoi Su-30,Su-24M2,Su-25SM3 போன்ற சக்தி வாய்ந்த ரஷ்யாவின் போர் விமானங்கள் அங்கு நின்றுள்ளன. பெரியளவிலான மோதலுக்காகவே இதை ரஷ்ய அதிபர் புதின் தயாராக வைத்திருந்ததாக பபக் தக்வே தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com