புதினின் இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும்..! - ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் கொக்கரிப்பு

புதினின் இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
புதினின் இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும்..! - ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் கொக்கரிப்பு
Published on

மாஸ்கோ,

உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு ரஷியாவுக்கு உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அந்த நாட்டின் அதிபர் புதின் மீதும் தனிப்பட்ட முறையில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ரஷிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவரும், அந்த நாட்டின் முன்னாள் பிரதமருமான டிமிட்ரி மெட்வெடேவ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், இந்த அற்புதமான கட்டுப்பாடுகள் (பொருளாதார தடைகள்) நிச்சயமாக எதையும் மாற்றாது. அமெரிக்காவுக்கு இது தெளிவாக தெரியும். அதிபர் புதின் நிர்ணயித்த இலக்குகள் அடையப்படும் வரை போர் நடவடிக்கை தொடரும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com