வட கொரியா மீதான இராணுவ நடவடிக்கை ஒப்புக்கொள்ள முடியாதது: ரஷ்யா

வட கொரியாவின் அணு ஆயுத மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டம் ஆகியவற்றால் எடுக்கப்படும் இராணுவ நடவடிக்கை முழுமையாக ஒப்புக்கொள்ள முடியாதது மட்டுமின்றி பேரழிகளை ஏற்படுத்தக்கூடியது என்று ரஷ்யா கூறியுள்ளது.
வட கொரியா மீதான இராணுவ நடவடிக்கை ஒப்புக்கொள்ள முடியாதது: ரஷ்யா
Published on

ஐக்கிய நாடுகள் சபை (நியூயார்க்)

பாதுகாப்பு அவையில் பேசிய ரஷ்யத் துணை வெளியுறவு அமைச்சர் கென்னடி காடிலோவ் பேச்சு வார்த்தைகளை மீண்டும் துவங்க வேண்டும் எனும் சீனாவின் பரிந்துரையை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்; ஏனெனில் தடைகள் மட்டும் தேவையான பலன்களை அளிக்காது என்று கூறினார்.

வட கொரியாவும் முறையற்ற விதத்தில் நடந்து கொள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அவை வட கொரிய பிரச்சினைக்கு உலக நாடுகள் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்றும், சீனாவை வைத்து வட கொரியாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற அமெரிக்க யோசனை பற்றியும் கூடி விவாதித்து வருகிறது.

காடிலோ கூறுகையில் சீனாவின் யோசனையான வட கொரியா தனது பரிசோதனைகளை நிறுத்தி வைப்பது என்றும் அதே வேளை அமெரிக்காவும், தென் கொரியாவும் தங்கள் கூட்டு இராணுவப் பயிற்சியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்றார்.

ஆனால் அமெரிக்க சீனாவின் யோசனையை நிராகரித்து வட கொரியா தனது இராணுவ நடவடிக்கைகளை முதலில் கைவிட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா, வட கொரியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய ஆறு நாடுகள் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களை கைவிட வேண்டும் என்று பேச்சு வார்த்தைகள் நடத்தின.

வட கொரியாவின் மீது அழுத்தங்களை கொடுத்தும், தடைகளை விதித்தும் அணு ஆயுதப்பிரச்சினை தீர்க்க நினைப்பது சாத்தியமற்றது என்று கூறினார் காடிலோவ்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com