கிரிமியா குண்டுவெடிப்புகளால் ரஷியா கவலை: இங்கிலாந்து உளவுத்துறை தகவல்

கிரிமியா குண்டுவெடிப்புகளால் ரஷியா கவலை அடைந்துள்ளதாக இங்கிலாந்து உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

கீவ்,

உக்ரைனின் ஒரு பகுதியாக விளங்கிய கிரிமியாவை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. அங்குள்ள ரஷியாவின் ஆயுதக்கிடங்கு, நேற்று முன்தினம் குண்டுவெடிப்புகளால் தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்தப் பகுதியை சேர்ந்த 3 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

உக்ரைன் மீதான போர் 6-வது மாதத்தை எட்டியுள்ள நிலையில் கிரிமியாவில் ரஷியாவின் ஆயுதக்கிடங்கில் நடந்த குண்டுவெடிப்புகள் அதிர வைத்துள்ளன.

இந்த குண்டுவெடிப்புகளில் சதி வேலை நடந்திருப்பதாக ரஷியா கருதுகிறது. மேலும் இது அந்த நாட்டை கவலையில் ஆழ்த்தி உள்ளது. இதுபற்றி நேற்று இங்கிலாந்து ராணுவ உளவுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ஆக்கிரமிப்புக்கு பின்னர் ரஷியாவின் தளமாக செயல்படுகிற கிரிமியா முழுவதும் பாதுகாப்பு நிலைமை மோசமாகி இருப்பது குறித்து ரஷிய தளபதிகள் அதிகளவில் கவலைப்படுவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்புகளை நாசவேலை என்று ரஷியாவே ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நிலையில், கிரிமியாவில் ஜான்கோய்க்கு அருகே அமைந்துள்ள கிடங்கில் வெடிப்புகள் நேற்றும் தொடர்ந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com