

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில், அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது. அவ்வப்போது கிளர்ச்சியாளர்கள் மீதும் வான்வழி தாக்குதல்களும் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், சிரியா நாட்டு எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரஷ்ய ஜெட் விமானம் ஒன்று நேற்று சிரியாவின் ஹிமியம் விமானப்படை தளத்திற்கு திரும்பி வந்துகொண்டிருந்தது.
சிரியா கடற்கரையில் இருந்து மத்திய தரைக்கடல் பகுதியில் சுமார் 35 கிமீ தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அந்த விமானம் திடீரென ரேடார் தொடர்பை இழந்து மாயமானது.
அந்த விமானத்தில் 14 ரஷ்ய ராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர். விமானத்தைத் தேடும் பணி ரஷ்ய அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விமானம் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.