மேற்காசிய பதற்றத்திற்கு மத்தியில் மங்களூரு வந்தடைந்த ரஷிய எண்ணெய் கப்பல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து எல்.பி.ஜி. எரிவாயு ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று மங்களூருவில் உள்ள புதிய மங்களூரு துறைமுகத்திற்கு நேற்று வந்தடைந்தது.

மேற்காசிய பதற்றத்திற்கு மத்தியில் மங்களூரு வந்தடைந்த ரஷிய எண்ணெய் கப்பல்
Published on

மங்களூரு

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான மோதலால் உலக அளவில் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கான வினியோகம் கடுமையாக பாதிப்படைந்து உள்ளது. இந்த நிலையில், மேற்காசிய பதற்றத்திற்கு மத்தியில் எம்.டி. அக்குவா டைட்டன் என்ற ரஷிய எண்ணெய் கப்பல் மங்களூரு நகருக்கு இன்று வந்தடைந்துள்ளது.

அந்த கப்பல் அரபி கடலில், மங்களூரு கடற்கரையில் இருந்து 10 நாட்டிகல் மைல்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த கப்பல் நேற்றே இந்தியாவுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கடுமையான சிக்கல்களுக்கு இடையே பாதுகாப்பாக இன்று வந்து சேர்ந்துள்ளது.

Also Read
லெபனானில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகி படுகொலை - இஸ்ரேல்

மேற்காசிய பதற்றத்திற்கு மத்தியில் மங்களூரு வந்தடைந்த ரஷிய எண்ணெய் கப்பல்

உலகளாவிய எரிசக்தி சந்தையானது, வினியோகத்திற்கான போதிய வசதியின்றி ஸ்திரமற்று காணப்படும் சூழலில், நாடுகளுக்கு இடையேயான மோதல் தொடர்பான பதற்றங்களால் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி கிடைப்பதில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த தருணத்தில் ரஷிய எண்ணெய் கப்பல் இந்தியாவுக்கு வந்து சேர்ந்து உள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து எல்.பி.ஜி. எரிவாயு ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று மங்களூருவில் உள்ள புதிய மங்களூரு துறைமுகத்திற்கு நேற்று வந்தடைந்தது. இதேபோன்று, துறைமுகம் எதிலும் நெருக்கடி காணப்படவில்லை என்றும் புதிய மங்களூரு துறைமுகத்தில் கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி. எரிவாயுவுக்கு, கடந்த 14-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சரக்கு சார்ந்த கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன என மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com