மின்னல் வேக பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற ரஷ்ய விண்கலம்

மின்னல் வேக பயணத்தில் ரஷ்ய விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்ததை நாசா டிவி ஒளிபரப்பு காட்டுகிறது.
மின்னல் வேக பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற ரஷ்ய விண்கலம்
Published on

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண் வெளியில் ஆய்வகம் அமைத்துள்ளனர். பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில், இந்த மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் விண்வெளி ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

ரஷ்யா ஆய்வு பணிக்காக தனது விஞ்ஞானிகளை கடந்த செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்து உள்ளது. மின்னல் வேக பயணத்தில் ரஷ்ய விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்ததை நாசா டிவி ஒளிபரப்பியது.

இந்த விண்கலம் கஜகஸ்தானில் பைக்கோனூர் காஸ்மோட்ரோம் இருந்து செவ்வாயன்று செலுத்தபட்டது. இந்த விண்கலம் 5 மணி நேரம் 38 நிமிடங்களில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தது. ரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஒரு குறைபாடற்ற வெளியீட்டு காட்சியை வழங்கியது. ரஷ்ய விஞ்ஞானிகள் சோயுஸ் எம்எஸ்-06 விண்வெளி காப்ஸ்யூலில் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.

இந்த குழுவில் இரண்டு நாசா விண்வெளி வீரர்கள், மார்க் வேன் ஹே, ஜோ அகாபா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் , அலெக்ஸ் மிசுர்கின் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் அங்கு தங்கியிருக்கும் சமயத்தில் 53 மற்றும் 54 பயணிகள் உறுப்பினர்ளுடன் பணியாற்றுவர்

"உயிரியல், உயிரி தொழிநுட்பம் , உயிரியல் அறிவியல் மற்றும் பூகோள அறிவியல் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com