

மாஸ்கோ,
ரஷ்யாவில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். அந்நாட்டு அரசியல் சாசனப்படி ஒருவரே தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபர் பதவியில் நீடிக்க முடியாது. கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் இருந்த புதின், பின் 2008-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். பின்னர், கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து, விளாடிமிர் புதின் அந்நாட்டு அதிபர் பதவியை வகித்து வருகிறார்.
வரும் 2024-ம் ஆண்டு வரை அவருக்கு பதவிக்காலம் உள்ளது. தற்போது, அவரது பதவிக்காலத்தை மேலும் இரு முறை, அதாவது 2036-ம் ஆண்டு வரை நீட்டிப்பது குறித்து, அரசியலமைப்பில் மாற்றம் செய்ய திட்டமிட்டு பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. எனினும் மக்களின் வாக்காளர்களின் ஒப்புதலும் மிக முக்கியமானது என்று கூறிய புதின், வாக்கெடுப்பை நடத்தினர். வாக்கெடுப்பு கடந்த 25-ம் தேதி தொடங்கியது. 7 நாட்கள் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. ரஷ்ய அதிபர் புதினும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தனது வாக்கினை பதிவு செய்தார்.
வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 60 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், புதினுக்கு 76.9 சதவிகித வாக்குகள் ஆதரவாக கிடைட்த்துள்ளன. இதன் மூலம் அவரது பதவிக்காலம் நீட்டிப்பு குறித்த அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கு பேராதரவு கிடைத்துள்ளது.
ரஷ்ய எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பு முடிவுகள் பொய்யானது என்று விமர்சித்துள்ளன. மக்களின் எண்ணங்களை இந்த முடிவுகள் பிரதிபலிக்கவில்லை எனவும் சாடியுள்ளன.