ரஷிய போர்; 16 கியாஸ் வினியோக நிலையங்களை மூடிய உக்ரைன்

உக்ரைனில் கியாஸ் வினியோகத்திற்கான 6 நிர்வாக பகுதிகளில் உள்ள 16 நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன.
ரஷிய போர்; 16 கியாஸ் வினியோக நிலையங்களை மூடிய உக்ரைன்
Published on

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 11வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளின் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் இருந்து சிறப்பு விமானங்களில் இதுவரை 15,900 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. உக்ரைனில் பிற பகுதியிலுள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள் அனைவரும் ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டுக்கு வந்து சேரும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

உக்ரைனில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதில் இருந்து இதுவரை 2,203 உக்ரைனிய ராணுவ உட்கட்டமைப்புகளை தகர்த்து இருக்கிறோம் என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், தி கீவ் இன்டிபெண்டென்ட் என்ற அரசு சார்பிலான ஊடகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ், மிகோலைவ், ஜபோரிஜ்ஜியா, கீவ், டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய 6 நிர்வாக பகுதிகளில் அமைந்துள்ள 16 கியாஸ் வினியோக நிலையங்களை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது என ரஷிய போரை சுட்டி காட்டி தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வருகிற 7ந்தேதி, ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான 3வது சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com