செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் திட்டம்- ரஷியா உடனான ஒத்துழைப்பை நிறுத்திய ஜரோப்பா

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தில் ரஷியா உடனான ஒத்துழைப்பை நிறுத்துவதாக ஜரோப்பா விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.
image courtesy: ESA
image courtesy: ESA
Published on

பிரஸ்ஸல்ஸ்,

உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் இன்று 22-வது நாளாக நீடிக்கிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களான தலைநகர் கிவ், கார்கிவ், மரியுபோலில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.

உக்ரைனில் படையெடுத்து உள்ளதால் ரஷியா மீது அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து உள்ளன.

இந்நிலையில் செவ்வாய் கிரகத்திற்கான எக்ஸோமார்ஸ் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.

எக்ஸோமார்ஸ் என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஆகியவற்றின் விண்வெளி திட்டமாகும். இதன் குறிக்கோள்கள் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலனை அனுப்பி அங்கு ஆராய்ச்சிகளை மேற்க்கொள்வதாகும்.

இத்திட்டத்தின் முதல் பகுதி 2016 இல் தொடங்கப்பட்டது. இந்த விண்கலனை கொண்டு செல்ல ரஷியா ராக்கெட்டை தயாரித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருவதால் இந்த திட்டத்தில் ரஷியா உடனான ஒத்துழைப்பை தற்காலிகமாக கைவிடுவதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறியது.

மேலும், விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு செல்ல ரஷிய ராக்கெட்டுகளின் உதவியை எதிர்பார்க்காமல் வேறு வழியை யோசித்து வருவதாக கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com