ரஷியாவின் மூர்க்கத்தனமான தாக்குதல் - வாழ தகுதியற்ற நகரமான மரியுபோல்

ரஷியாவின் மூர்க்கத்தனமான தாக்குதலால் வாழ தகுதியற்ற நகரமாக மரியுபோல் மாறியுள்ளது.
கோப்புப் படம் AFP
கோப்புப் படம் AFP
Published on

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 37-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் தாக்குதலால் ஆயிரக்கணக்கான உக்ரைனின் கலாச்சார சின்னங்கள் சேதமடைந்துள்ளன. தேவாலயங்கள், வரலாற்று கட்டிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உட்பட ஆயிரக்கணக்கான கலாச்சார சின்னங்கள் போரினால் சேதமடைந்துள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனின் மரியுபோல் நகரமே தரைமட்டமாகியுள்ளது. கட்டிடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள் என்று ரஷிய படைகள் பாரபட்சமின்றி தாக்குதலை நடத்திய நிலையில் துறைமுக நகரமான மரியுபோல் பெரும் சேதங்களை சந்தித்துள்ளது.

ரஷிய தாக்குதலுக்கு பிறகு மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மரியுபோல் நகரம் மாறியுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com