

இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பும் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட கூட்டு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும் போரில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் சோச்சி நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் சிரியாவுக்கு ஆதரவு அளித்து வருவதற்காக விளாடிமிர் புதின், ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரி மற்றும் ராணுவ தலைமை தளபதி ஆகியோருக்கு ஆசாத் நன்றி தெரிவித்து கொண்டார்.