உலகத் தலைவர்களின் அதிகபட்ச ஆதரவு எங்களுக்கு தேவை - இலங்கை எதிர்க்கட்சி தலைவர்

இலங்கைக்கு உதவுமாறு அனைத்து உலகத் தலைவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
உலகத் தலைவர்களின் அதிகபட்ச ஆதரவு எங்களுக்கு தேவை - இலங்கை எதிர்க்கட்சி தலைவர்
Published on

கொழும்பு,

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்பாக நாடு தழுவிய போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.ஒருபுறம் டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.மறுபுறம் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் அதிகரித்து வருகிறது.

சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி காரணமாக இலங்கை அரசாங்கத்தின் வருமானமும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இது எரிவாயு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்கி, பெரும் மின்வெட்டுக்கு வழிவகுத்துள்ளது.

இதனால் அரசுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.பொருளாதார நெருக்கடிக்கு தற்போதைய அரசாங்கத்தை காரணம் காட்டுகிறார்கள்.

இந்த நிலையில், இலங்கை நிலவரம் குறித்து இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இது இயற்கையாக உருவாகியிருக்கும் போராட்டம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசியலமைப்பு நடைமுறைகள் மூலம் கிடைக்கும் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவோம்.

இலங்கைக்கு உதவுமாறு அனைத்து உலகத் தலைவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். எங்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆட்சி மாற்றம் குறித்து அவர் பேசுகையில், பாகிஸ்தானுக்கு ஜனநாயக அரசியலை நடத்துவதற்கு தனியான வழிமுறை உள்ளது.

எங்களிடம் எங்கள் சொந்த அரசியலமைப்பு மற்றும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. நாட்டின் உச்சபட்ச சட்டத்தை, அதாவது அரசியலமைப்பு சட்டத்தை தவிர வேறு எதையும் நாங்கள் பின்பற்ற மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com