அறிகுறிகள் இல்லாத கொரோனா பாதிப்பை உமிழ்நீர் சோதனை மூலம் கண்டறியலாம் - புதிய ஆய்வு

அறிகுறிகள் இல்லாத கொரோனா பாதிப்பை விரைந்து கண்டறிய உமிழ்நீர் சோதனையை பயன்படுத்தலாம் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
அறிகுறிகள் இல்லாத கொரோனா பாதிப்பை உமிழ்நீர் சோதனை மூலம் கண்டறியலாம் - புதிய ஆய்வு
Published on

டோக்கியோ

உலக அளவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அதை கண்டறிவதற்கான சோதனைகள் மற்றும் அதற்கான தடுப்பூசி கண்டறியும் பணிகளும் ஆய்வகங்களில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அறிகுறியற்ற கொரோனா பாதிப்பை உமிழ்நீர் சோதனைகள் மூலம் விரைவாக கண்டறிய முடியும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

உமிழ்நீர் மாதிரிகளை பரிசோதிப்பது அறிகுறியற்ற கொரோனா தொற்றை கண்டறிவதற்கான எளிதான, விரைவான மற்றும் பயனுள்ள அணுகுமுறையை வழங்கக்கூடும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மருத்துவ தொற்று நோய்கள் இதழில் வெளியான இந்த ஆராய்ச்சி அறிக்கையில், இந்த ஆய்வில் ஜப்பானில் கொரோனா அறிகுறிகள் இல்லாத கிட்டத்தட்ட 2,000 பேரின் நாசோபார்னீஜியல் துணி மற்றும் உமிழ்நீர் மாதிரிகளை பரிசோதித்து ஒப்பிட்டுப் பார்த்தது.

இது குறித்து ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த தாகனோரி டெஷிமா கூறுகையில், சமூகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குள் கொரோனா பரவுவதை தடுப்பதற்கு அறிகுறியற்ற பாதிக்கப்பட்ட நபர்களை விரைவாக கண்டறிவது மிக முக்கியமானதாக இருக்கும். பெரும்பாலான மாதிரிகளில் இரண்டு வெவ்வேறு வைரஸ் பெருக்க சோதனைகள் செய்யப்பட்டன அவை,

பரவலாகக் கிடைக்கக்கூடிய பிசிஆர் டெஸ்ட் மற்றும் குறைவாக பயன்படுத்தப்படும் ஆர்டி-லாம்ப் டெஸ்ட்.

தற்போது நடைபெற்ற ஆய்வில் அனைத்து மாதிரிகளிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை முடிவுகளின் எண்ணிக்கை மிகவும் ஒத்ததாக இருந்தது. நாசோபார்னீஜியல் துணி மற்றும் உமிழ்நீர் மாதிரிகள் முறையே 77-93 சதவிகிதம் மற்றும் 83-97 சதவிகித தொற்றுநோயை கண்டறிய முடிந்தது.

இரண்டு சோதனைகளும் 99.9 சதவீதத்திற்கும் அதிகமான தொற்று இல்லாதவர்களை அடையாளம் காண முடிந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.நாசோபார்னீஜியல் துணி மற்றும் உமிழ்நீரில் கண்டறியப்பட்ட வைரஸ்கள் சமமானவை என்றும் அவை ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையவை.

அறிகுறியுடன் காணப்பட்ட நோயாளிகளின் ஆரம்ப தரவுகளிலிருந்து 70 சதவிகிதத்தை முன்னர் நினைத்ததை விட பி.சி.ஆர் உணர்திறன் மிக அதிகமாக கண்டறிந்துள்ளது,

நாசோபார்னீஜியல் மற்றும் உமிழ்நீர் மாதிரிகள் இரண்டையும் சார்ஸ்கோவ் 2 க்கு அதிக உணர்திறன் மற்றும் தனித்தன்மையை கொண்டிருப்பதாக கண்டறிந்தாலும், உமிழ்நீர் சோதனையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் நாசோபார்னீஜியல் துணியால் ஆன சோதனைக்கு குறிப்பிடத்தக்க லாஜிஸ்டிக் நன்மைகளைக் கொண்டுள்ளது.

உமிழ்நீரின் சுய சேகரிப்பு பரிசோதனை என்பது சோதனை எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு வலியற்றது, மேலும் முக்கியமாக, இது பரிசோதகர்களுடனான நெருங்கிய தொடர்பை நீக்குகிறது, வைரஸ் வெளிப்படும் அபாயத்தை குறைக்கிறதுர.

பொதுவாக உமிழ்நீர் சேகரிப்பை, விளையாட்டு மைதானங்கள் அல்லது விமான நிலையங்களில் மேற்கொள்ளலாம், என்று டெஷிமா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com