இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் சனத் ஜெயசூர்யா பங்கேற்பு..!!

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா பங்கேற்றார்.
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் சனத் ஜெயசூர்யா பங்கேற்பு..!!
Published on

கொழும்பு,

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நிதி நெருக்கடையை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது. மேலும், விவசாயத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால், உணவு பொருட்களின் உற்பத்தி குறைந்தது.

இதன் காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துவருவதால் அதிபர், பிரதமருக்கு எதிராக இலங்கை முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா பங்கேற்றார். இதனிடையே கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. 'GotaGoHome' என்ற ஹேஷ்டாக் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றது.

இதனிடையே கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாளை காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. நான்கு பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிறிசேனாவின் இலங்கை சுதந்திரக்கட்சி திரும்பப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com