சவுதி அரேபியாவின் பெட்ரோலிய துறை மந்திரியாக இளவரசர் அப்துல்அஜீஸ் நியமனம்

சவுதி அரேபியாவின் பெட்ரோலிய துறை மந்திரியாக இளவரசர் அப்துல்அஜீஸ் பின் சல்மான் அல் சாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சவுதி அரேபியாவின் பெட்ரோலிய துறை மந்திரியாக இளவரசர் அப்துல்அஜீஸ் நியமனம்
Published on

கெய்ரோ,

சவுதி அரேபியா நாடு எண்ணெய் வளம் அதிகம் நிறைந்தது. அந்நாட்டின் பெட்ரோலிய மற்றும் தாதுவளங்கள் அமைச்சராக உள்ள அல்-பலி என்பவரை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த செவ்வாய் கிழமை அவர் அந்நாட்டின் எண்ணெய் நிறுவனம் சவுதி அராம்கோவின் இயக்குனர்கள் வாரியத்தில் இருந்து முழுவதும் நீக்கப்பட்டார்.

ரஷ்ய-சவுதி அரேபிய வர்த்தகம், பொருளாதார மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான அரசு ஆணைய சந்திப்பில் ரஷ்ய ஆற்றல் அமைச்சர் அலெக்சாண்டர் நோவக்குடன் அல்-பலி பேச்சுவார்த்தை நடத்தியவர் ஆவார்.

இதனை தொடர்ந்து, அந்த பதவிக்கு சவுதி இளவரசர் அப்துல்அஜீஸ் பின் சல்மான் அல் சாத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர், பதவி விலகும் மந்திரியிடம் இருந்து பொறுப்பினை ஏற்று கொள்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com