ஏமனில் அரபு அமீரக படைகள் மீது சவுதி அரேபியா தாக்குதல்

ஏமனில் அரபு அமீரக படைகள் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தி உள்ளது.
சனா,
ஏமனில் 2014-ம் ஆண்டு சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். ஐ.நா. அங்கீகாரம் பெற்ற ஆதரவுப்படைகள் தெற்கே சில பகுதிகளை கைப்பற்றி ஆட்சி நடத்தினர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்த படைகள் தனிநாடு கோரி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு அரபு அமீரகம் ஆயுதங்கள் கொடுத்து உதவி வருகின்றன. இதனை எதிர்த்து சவுதி அரேபியா அரசாங்கம் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக போரிட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று அரபு அமீரகத்தின் கட்டுப்பாட்டில் ஏமனில் உள்ள முகல்லா துறைமுகத்தை குறிவைத்து சவுதி அரேபியா தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்கள் பாரத்துடன் அரபு அமீரகத்தில் இருந்து வந்த கப்பல்கள் தகர்க்கப்பட்டன.
மேலும் ஏமன் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவை எனவும் சவுதி அரேபியா நேரடியாக எச்சரித்துள்ளது.






