

துபாய்
உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் சந்தை நிலவரம் நிலையாக இருக்க வைப்பதே சவூதியின் இலக்கு என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நைஜீரியாவும், லிபியாவும் தங்களது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளன. இதையொட்டி அந்த இரு நாட்களுடனும், பிற நாடுகளுடனும் ஒத்துழைத்து தங்களது உற்பத்தியை மேற்கொள்ளப்போவதாக சவூதி கூறியது.
சவூதி தனது ஏற்றுமதியில் ஒரு மில்லியன் பேரல்களை வரைக் குறைக்கவுள்ளதாகவும் இது நைஜீரிய, லிபிய உற்பத்தியில் ஏற்படும் உயர்வை அனுசரிக்க உதவும் என்றும் தெரிகிறது.