சவுதி படை தாக்குதல்; ஏமனில் 190 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பலி

சவுதி தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய தாக்குதலில் ஏமனில் 190 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
சவுதி படை தாக்குதல்; ஏமனில் 190 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பலி
Published on

ரியாத்,

ஏமன் நாட்டில் அதிபர் அப்து-ரப்பு மன்சூர் ஹாடிக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டணி படையினர் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் ஏமனின் மாரிப் மாகாணத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது 36 தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.

இந்த ராணுவ நடவடிக்கையில், 190 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதேபோன்று, 20 ராணுவ வாகனங்கள் மற்றும் ஆளில்லா விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளும் அழிக்கப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com