333 கோடி வரதட்சணை கொடுத்து 25 வயது பெண்ணை திருமணம் செய்த சவுதி இளவரசர்

சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான் 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
333 கோடி வரதட்சணை கொடுத்து 25 வயது பெண்ணை திருமணம் செய்த சவுதி இளவரசர்
Published on

68 வயதான சுல்தான் 25 வயதான பெண்ணை மணந்துள்ளார். இதற்காக 50 மில்லியன் டாலர்களை வரதட்சணையாக பெண்ணுக்கு அவர் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமண நிகழ்வின் போது அதை சுற்றியுள்ள இடத்தில் 30 சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த வெள்ளை நிற சொகுசு பேருந்தில் 30 பெட்டிகளில் பரிசுகள் கொண்டு வரப்பட்டன. இந்த பரிசுகள் மணப்பெண் வீட்டாருக்கு கொடுக்கப்பட்டது.

இதோடு வைரங்களும் பெண்ணுக்கு தரப்பட்டது. மணப்பெண் வெள்ளை நிற ஆடையில் அழகாக ஜொலிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com