செல்போனை பார்த்தபடி மேல்தளத்தில் விழுந்தவர், கீழ்தளத்தில் எழுந்தார் - வைரலாகும் வீடியோ..!

செல்போனை பார்த்தபடி வந்த இளைஞர் ஒருவர் மேல்தளத்திலிருந்து தவறி விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.
செல்போனை பார்த்தபடி மேல்தளத்தில் விழுந்தவர், கீழ்தளத்தில் எழுந்தார் - வைரலாகும் வீடியோ..!
Published on

இஸ்தான்புல்,

துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், ஊழியர்கள் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்தில் உள்ள குடோனில் பொருட்களை அடுக்கி கொண்டிருந்தனர். கீழ் தளத்தில் பொருட்களை வைப்பதற்காக தளத்தின் தரையில் இருந்த சிறிய அடைப்பு பகுதியை திறந்து வைத்திருந்தனர்.

அப்போது அப்துல்லா மட் என்ற 19 வயது இளைஞர் செல்போனை பார்த்துக் கொண்டே வந்ததில் தரையில் திறந்து வைக்கப்பட்டிருந்த அடைப்பை கவனிக்கவில்லை. அருகில் இருந்த ஊழியரும் வேலை செய்வதில் கவனமாயிருந்ததால் அப்துல்லாவிடம் இதுகுறித்து சொல்லவில்லை.

இந்த நிலையில் அப்துல்லா அந்த அடைப்பில் தவறி விழுந்தார். நல்ல வேளையாக கீழ் தளத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டிகளின் மீது விழுந்ததால் அவருக்கு அடி எதுவும் படவில்லை. தற்போது அந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com