துப்பாக்கிச்சூடு நடக்கப்போவதாக வந்த அழைப்பு - அமெரிக்க செனட் கட்டடத்தில் பரபரப்பு

அமெரிக்க செனட் கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப் போவதாக வந்த அழைப்பால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
துப்பாக்கிச்சூடு நடக்கப்போவதாக வந்த அழைப்பு - அமெரிக்க செனட் கட்டடத்தில் பரபரப்பு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிடோல் போலீசாரின் 911 என்ற அவசர எண்ணிற்கு திடீரென ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப் போவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செனட் கட்டட வளாகத்தில் சோதனை நடத்தினர். மேலும் செனட் கட்டடத்திற்குள் இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

எந்நேரமும் துப்பாக்கிச்சூடு நடக்கலாம் என்று கூறப்பட்டதால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் எந்த ஆயுதமும், யாரும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த அழைப்பு போலியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com