கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு ரத்து

ஓராண்டு பாதுகாப்பு நீட்டிப்புக்கான சிறப்பு உத்தரவை பைடன் பிறப்பித்து விட்டு சென்றபோதும், டிரம்ப் இதனை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளார்.
கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு ரத்து
Published on

நியூயார்க்,

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் கமலா ஹாரிஸ். கடந்த 2024-ம் ஆண்டு நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். எனினும், அதில் குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளரான டிரம்ப் வெற்றி பெற்று பதவியேற்றார்.

கமலா ஹாரிசுக்கு, உயர் பதவியை வகிப்பவருக்கு வழங்கப்படும் ரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன், பதவியில் இருந்து வெளியேறும் முன் அவருக்கு இந்த பாதுகாப்பு சேவையை ஏற்பாடு செய்து விட்டு சென்றார்.

கடந்த ஜனவரியில் கமலா ஹாரிஸ் பதவி விலகிய நிலையில், 6 மாத காலத்திற்கு அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அவருக்கு ஓராண்டு பாதுகாப்பு நீட்டிப்புக்கான சிறப்பு உத்தரவை பைடன் பிறப்பித்து விட்டு சென்றபோதும், டிரம்ப் இதனை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளார்.

இதுபற்றி டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதில் இருந்து 6 மாதம் வரை மட்டுமே இந்த ரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com