

வாஷிங்டன்
ரஷ்யர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக கூறப்படும் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் பிரச்சார அணியினருக்கு தொடர்பிருந்ததா என விசாரித்து வந்த ஜேம்ஸ் கோமேவை டிரம்ப் திடீரென்று பதவியிலிருந்து நீக்கினார். அவருக்கு பதிலாக உள்நாட்டு உளவு நிறுவனமான எஃப் பி ஐக்கு கிறிஸ்டபர் விரேவை அதிபர் நியமித்தார். இப்போது அவரது பதவிக்கு தனது ஒப்புதலை நாடாளுமன்ற செனட் சபை கொடுத்துள்ளது. அதற்கான தீர்மானம் 92-5 என்ற கணக்கில் நிறைவேறியது.
விரே தான் அரசியல் சட்டத்திற்கு மட்டும் விசுவாசமாக இருப்பேன் என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.