செனகல் நாட்டு நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.யை கன்னத்தில் அறைந்ததால் பரபரபப்பு

செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் விவாதம் முற்றி எதிர்க்கட்சி எம்.பி ஆளும்கட்சி பெண் எம்.பி கன்னத்தில் அறைந்தார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் முன்தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பட்ஜெட் தொடர்பாக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடந்தது.

இதில் ஆளும்கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. ஆமி என்டியாயே கினிபி என்பவருக்கும், எதிர்க்கட்சியை சேர்ந்த மசாதா சாம்ப் என்ற எம்.பி.க்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரம் அடைந்த சாம்ப் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று எதிர்வரிசையில் அமர்ந்திருந்த பெண் எம்.பி. கினிபியின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கினிபி மிகவும் ஆக்ரோஷத்துடன் சாம்ப் மீது நற்காலியை வீசி எறிந்தார். அப்போது மற்றொரு எதிர்க்கட்சி எம்.பி. கினிபியை உதைத்து கீழே தள்ளினார். இதனால் இரு தரப்புக்கும் இடையில் பெரும் கைகலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com