திருடப்பட்ட சிற்பத்தை இறக்குமதி செய்ததாக ஹாலிவுட் நடிகை மீது பரபரப்பு புகார்

ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியன். ஊடக பிரபலம், மாடல் அழகி, தொழில் அதிபர், தயாரிப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் இவர்.
திருடப்பட்ட சிற்பத்தை இறக்குமதி செய்ததாக ஹாலிவுட் நடிகை மீது பரபரப்பு புகார்
Published on

இத்தாலியில் இருந்து திருடப்பட்ட பழங்கால ரோமானிய சிற்பம் ஒன்றை இவர் இறக்குமதி செய்ததாக புகார் எழுந்துள்ளது.இறக்குமதி செய்யப்பட்ட ஆவணங்களில் இவருடைய பெயர் இருப்பதாக கோர்ட்டு ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை நடிகை கிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் கூறுகையில், இது அங்கீகாரமின்றி அவரது பெயரை தவறாக பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம். இந்த பரிவர்த்தனை பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த சிற்பம் அதன் உண்மையான உரிமையாளர்கள் கைக்கு போய்ச்சேரும் என்று நம்புகிறோம் என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com