சீனாவில் வாயு கசிவால் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 7 பேர் பலி

சீனாவில் வாயு கசிவால் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
சீனாவில் வாயு கசிவால் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 7 பேர் பலி
Published on

நான்ஜிங்,

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உலோக தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அது வெடித்து சிதறியுள்ளது. இதில் 7 பேர் பலியாகினர். 5 பேர் காயமடைந்தனர்.

உடைந்த உலோகங்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. எனினும் வெடிவிபத்து ஏற்பட்டது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

இது கடந்த 10 நாட்களில் ஜியாங்சுவில் ஏற்பட்டுள்ள 2வது மிக பெரிய வெடிவிபத்து ஆகும். கடந்த மார்ச் 21ந்தேதி யான்செங் நகரில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com